'சார் உங்களுக்கு லாட்டரி அடிச்சுருக்கு...' 'அய்யயோ...! இவ்ளோ பணத்த வச்சு என்ன பண்றதுன்னே தெரியலயே...' 'ஒரே டிக்கெட்...' மொரட்டு லக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டால் பல கோடிகளுக்கு சொந்தக்காரரான கேரளத்தை சேர்ந்த அசைன் முகமது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அசைன் முகமது. அசைன் முகமதுவுக்கு ஆஷீபா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரியில் வேலை செய்யும் இவர் எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்குவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்கள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளிலும் ஒரு சில இந்திய மாநிலங்களிலும் எவ்வித தடையும் இன்றி விற்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சிலர் வெற்றி பெற்று லட்சங்களையும், கோடிகளையும், பல பரிசு பொருட்களையும் அள்ளுவர். ஒரு சிலருக்கு டிக்கெட்டே மிஞ்சும்.
இவ்வாறு அமீரகத்தில் நம்ம ஊர் லாட்டரி டிக்கெட்டுகள் போல ஆன்லைன் லாட்டரிகள் மிகவும் பிரபலம். பரிசு விழுந்தால், ஒரே நாளில் கோடீஸ்வரராகி விடலாம். அப்டித்தான் அசைன் முகம்மதுக்கு மட்டும் இந்த முறை லம்பாக ரூ. 24.6 கோடி பரிசு விழுந்திருக்கிறது.
அசைன் முகமது தன் நண்பர்களுடன் பல முறை லாட்டரி டிக்கெட் வாங்கும் போதெல்லாம் தோல்வியே கிடைத்தது. இந்த முறை யாருடனும் கூட்டு சேராமல் கடந்த மே 14- ந் தேதி தனி ஆளாக ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கியுள்ளார். தற்போது அவர் வாங்கிய எண்ணிற்கு ரூ. 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம், ஒரு திர்ஹாம் இந்திய மதிப்பில் 20 ரூபாய் ஆகும் ) சொந்தக்காரராக மாறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அசைன், முதலில் எனக்கு சம்பந்தப்பட்ட டூட்டி ஃப்ரி அலுவலகத்திலிருந்து போன் வந்தது, அப்போது உங்களுக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது என்று சொன்னார்கள். நான் அப்போது இது என் நண்பர்கள் செய்யும் வேலை என்று போனை துண்டித்து விட்டேன். அதன்பின், ஆன்லைக் இணையதளத்தில் தேடிய போது நான் வாங்கிய எண்ணுக்கு பரிசு விழுந்தது தெரிந்து சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன்.
நான் 27 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தாலும் என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை. ஒரு போராட்டமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறேன். எனது போராட்ட வாழ்க்கைக்கு கிடைத்த வெகுமதி தான் இந்த பரிசு. என்னுடைய கஷ்டப்படும் நேரங்களில் உதவி தேவைப்படும் மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்தேன், இனியும் என் பணியை அவ்வாறே தொடருவேன் எனக் கூறியுள்ளார் அசைன்.