‘அப்போ ஏஜன்ட், இப்போ ரூ.5 கோடிக்கு அதிபதி’.. ஓவர் நைட்டில் அடித்த அதிர்ஷ்டம், கேரளாவை கலக்கிய தமிழர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | May 29, 2019 02:06 PM
கேரளாவில் விற்பானையாகாத லாட்டரி சீட் மூலம் தமிழர் ஒருவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லையா என்பவர் குடுப்பத்துடன் கேரளா மூவாத்துப்புழா என்னும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதலில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்த செல்லையா பின்னர் லாட்டரி விற்கும் ஏஜன்டாக மாறினார். கேரளாவில் லாட்டரிக்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் கேரள அரசு ரூ. 5 கோடிக்கான லாட்டரி விற்பனையை அறிவித்தது. இதனால் செல்லையாவும் வழக்கபோல லாட்டரிகளை வாங்கி விற்கத் தொடங்கியுள்ளார். இதனை அடுத்து லாட்டரி குலுக்கலில் மூவாத்துப்புழா அருகே உள்ள வாழக்குளம் என்னும் பகுதியில் உள்ள ஏஜன்டிடம் வாங்கிய லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பரிசை வாங்க யாரும் வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து செல்லையா தன்னிடம் இருந்த விற்காத சில லாட்டரி சீட்டுகளை எடுத்துப் பாத்துள்ளார். அப்போது பரிசு விழுந்த லாட்டரி சீட்டு தன்னிடம் இருந்ததை பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார். இது குறித்து தெரிவித்த செல்லையா, ‘என்னிடம் இருந்த 2 லாட்டரி சீட்டுகளை விற்க பலரிடம் கெஞ்சியிருப்பென். ஆனால் யாரும் அதை வாங்கவில்லை. ஆனா இப்போ இந்த லாட்டரி சீட்டுதான் என்னை பணக்காரன் ஆக்கி உள்ளது’ என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
