அடிச்சான் பாருய்யா 'லக்கி பிரைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து கஷ்டப்பட்டவருக்கு லாட்டரியில் 47 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளன. மக்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா காரணமாக வேலையிழந்து தவித்து வந்துள்ளார். சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த அவரது மனைவி வேலையில் இருந்தபோது அந்நாட்டில் இணையதள லாட்டரி நடத்தும் நிறுவனத்தில் இருந்து லாட்டரி எண் ஒன்றைப் பெற்றுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள குலுக்கல் முடிவில் அந்த நபருக்கு 10.3 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 47 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால் வேலையிழந்து சிரமப்பட்டு வந்த அந்நபரும், அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அந்த தம்பதியினர் இந்தப் பரிசு கிடைத்திருப்பதால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எப்போதும் போல் வாழ்ந்து இயன்றவரை பிறருக்கு உதவ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
