'கேரள லாட்டரியில்' ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்தது 'அதிர்ஷ்டம்'... ஒரு நாளில் 'கோடீஸ்வரனாக' மாறிய 'யோகம்'..."எத்தனை கோடி தெரியுமா...?"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 12, 2020 02:52 PM

கேரளாவில் ஆதிவாசி  தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

Rs 12 crore prize for a tribal worker in Kerala

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கேரளா அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சமீபத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி காலனியை சேர்ந்த ராஜன் என்ற தொழிலாளிக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்த லாட்டரி சீட்டை ராஜன், வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் வாங்கி இருந்தார். பரிசுத் தொகையை அருகில் உள்ள வங்கியில் ராஜன் டெபாசிட் செய்தார்.

பரிசு கிடைத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன், தான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதில்லை என்றும், எப்பொழுதாவது ஒருமுறை தான் வாங்குவேன் என்றும்  தெரிவித்தார். அப்படி வாங்கிய சீட்டுக்குத்தான் தற்போது பரிசு விழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தன்னுடைய பிள்ளைகளின் எதிர்கால செலவுகளுக்கு இந்த தொகையை செலவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tags : #KERALA #TRIABLE #12 CRORE #LOTTERY