‘அப்போ பெயிண்டர், இப்போ கோடீஸ்வரன்’.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..! குடும்பத்தலைவனுக்கு அடிச்ச ஜாக்பாட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 11, 2019 01:58 PM

பெயிண்டர் ஒருவருக்கு லாட்டரியில் 2.5 கோடி பரிசு விழுந்த சம்பவம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

Painter from Himachal hits Jackpot, Wins Rs 2.5 crore lottery

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமையின் காரணமாக பெயிண்டர், எலக்ட்ரீசியன் என பல வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சஞ்சீவ் குமார் அழைத்து சென்றுள்ளார். அப்போது தீபாவளி சிறப்பு லாட்டரி சீட்டுகள் இரண்டு வாங்கியுள்ளார்.

ஆனால் வழக்கம்போல சஞ்சீவ் குமார் தனது வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் லாட்டரி சீட்டின் முடிவு கடந்த 1ம் தேதி வெளியாகியுள்ளது. அதில் சஞ்சீவ் குமார் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற அவர் இந்த பரிசால் தன்னுடைய வறுமை நீங்கவுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணத்தை தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : #PAINTER #HIMACHAL #LOTTERY #JACKPOT