'34 வயது' பெண்ணுக்கு '62 வயது' நபருடன் 'கள்ளக்காதல்...' 'எவ்வளவோ' எடுத்துக்கூறியும் கேட்காத 'மனைவி...' 'இறுதியில்' கணவன் செய்த 'வெறிச்செயல்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 38). கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு லட்சுமி (34) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், லட்சுமி அதே பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்யும் கோவிந்தசாமி (62) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த செந்தில்வேல்முருகன் கண்டித்துள்ளார். இதனால் மோதல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி தியாகி குப்பன் தெருவில் இருக்கும் கோவிந்தசாமியின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்வேல் முருகன், நேற்று அதிகாலை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். கதவை திறந்த கோவிந்தசாமி மீது, தனது கையில் எடுத்துச் சென்றிருந்த கேனில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றியதாக தெரிகிறது. பின்னர் அவரது உடலில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடலில் பற்றி எரிந்த தீயுடன் கோவிந்தசாமி அலறி துடித்தார்.
இந்த சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி எழுந்து ஓடி வந்தார். அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி செந்தில்வேல்முருகன் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து, தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை லட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கொலை வழக்கு பதிவு செய்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் சிகிச்சை பெற்று வரும் கோவிந்தசாமியிடம், மரண வாக்கு மூலம் பெற்றதாக தெரிகிறது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட செந்தில்வேல்முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

மற்ற செய்திகள்
