இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’...
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் சென்னைக்காரர் ஒருவருக்கு லாட்டரியில் பரிசாக பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் கிடைத்துள்ளது.

சுமார் 30 ஆண்டுகளாக துபாயில் தொழில் செய்து அங்கேயே வாழ்ந்துவருபவர் சையத். சென்னையைச் சேர்ந்தவரான இவர் துபாயில் உள்ள டென்னிஸ் கிராமத்தில் நடைபெற்ற WTA ஆண்கள் இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் ‘துபாய் டியூட்டி ஃபிரீ டென்னிஸ் சர்ப்ரைஸ்’ லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதையடுத்து அதில் அவருக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. (BMW 750Li xDrive M Sport) சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது. மேலும் இந்த சீட்டுக்கான ஜாக்பாட் குலுக்கலில் பிரபல டென்னிஸ் சாம்பியனான நோவாக் ஜோக்கோவிக் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள சையத், “இந்த மாதத்தின் முதல் நாளைத் தொடங்கும்போதே ஒரு சிறப்பான செய்தி கிடைத்துள்ளது. இந்த அற்புதமான சர்பிரைஸுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
