'குழந்தைகளுக்கு சயனைடு'...'என் நிலைமை யாருக்கும் வேண்டாம்'...உறைய வைக்கும் மரண வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 13, 2019 10:10 AM

3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை அதிரச்செய்துள்ளது.

Villupuram: Couple Poisons 3 Children, Commits Suicide Over Debt Issue

விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருண். நகை தொழிலாளியான இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்‌ஷினி(5), யுவஸ்ரீ(3) மற்றும் 3 மாத கைக்குழந்தையான பாரதி என 3 குழந்தைகள் இருந்தனர். இவர் தடை செய்யப்பட்ட மூன்றாம் நம்பர் லாட்டரிகளை அதிக அளவு வாங்கியதால் கடன் சுமையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த அவர், தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் மனைவியுடன் சேர்ந்து அருணும் விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே இந்த கோர சம்பவம் குறித்து  அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதனிடையே தனது மரண வாக்குமூலத்தில் மூன்றாம் நம்பர் லாட்டரியை ஒழிக்க வேண்டும் எனவும், யாரும் அதற்கு அதற்கு அடிமையாகி விட வேண்டாம் எனவும் தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். லாட்டரி வாங்கி கடன் சுமை தாங்காமல் ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #VILLAGE #VILLUPURAM #POISONS #DEBT ISSUES #LOTTERY #CYANIDE #COUPLE #லாட்டரி சீட்டு #மரண வாக்குமூலம்