'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்புக்கு இடையே துபாயில் இந்தியர்கள் 3 பேர் லாட்டரி டிக்கெட் பரிசுத் தொகை மூலம் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த நண்பர்களான ஜிஜேஷ், ஷாஜகான் மற்றும் ஷானோஜ் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் துபாயில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்காக காரை ஓட்டி வந்த அவர்களுடைய வருமானம் முழுவதுமாக தடைபட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதையறிந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மூவரும் பரிசுத் தொகையை பிரித்துக் கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்துப் பேசியுள்ள அவர்கள், ''லாட்டரி பரிசுத் தொகையை வைத்து எங்களுடைய கடனை அடைத்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
