‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்!’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 06, 2020 06:50 PM

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 11 மாதக் குழந்தையின் பெயரில் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது.

11 Month Old Indian Baby Wins Lottery Worth $1 Million In UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் மாதாந்திர லாட்டரி சீட்டில் கேரளாவைச் சேர்ந்த ரமீஸ் ரஹ்மான் என்பவர் பங்கேற்று, தன்னுடைய 11 மாத குழந்தையின் பெயரில் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ரமீஸ் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 12 லட்சம் ரூபாய்) பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ரமீஸ், "என்னுடைய மகனின் வாழ்க்கை நன்றாகத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வேலை செய்துவரும் ரமீஸ் வரும் 13ஆம் தேதி தன் மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #MONEY #LOTTERY #UAE #FATHER #BABY