‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 06, 2020 08:42 PM
கொல்கத்தாவில் ஒருவருக்கு குப்பையில் வீசிய லாட்டரி டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த சாதிக் என்பவர் அங்குள்ள தம் தம் பகுதியில் காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடைக்குச் சென்ற சாதிக் 5 நாகாலாந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். பின் புத்தாண்டுக்கு அடுத்த நாள் தான் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிய கடைக்கு சென்று, தன்னுடைய டிக்கெட்டிற்கு பரிசு விழுந்துள்ளதா என சாதிக் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் பரிசு எதுவும் விழவில்லை எனக் கூற, வீட்டுக்குத் திரும்பிய சாதிக் தான் வாங்கிய 5 லாட்டரி டிக்கெட்டுகளையும் வீசி எறிந்துள்ளார்.
மறுநாள் வேறு சில பொருட்கள் வாங்குவதற்காக அதே கடைக்கு சாதிக் செல்ல, அந்தக் கடைக்காரர் அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு அன்று பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சாதிக் உடனடியாக வீட்டிற்கு வந்து தான் தூக்கி எறிந்த லாட்டரி டிக்கெட்டுகளைத் தேடியுள்ளார். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், சாதிக்கின் மனைவி அந்த டிக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடித்து எடுத்துள்ளார்.
இதையடுத்து லாட்டரி டிக்கெட்டுகளுடன் கடைக்குச் சென்ற சாதிக்கிற்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவருடைய 5 லாட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றிற்கு ரூ 1 கோடி ரூபாய் பரிசும், மற்ற நான்கிற்கு தலா ரூ 1 லட்சம் ரூபாய் பரிசும் விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பரிசுத் தொகைக்காக காத்திருக்கும் சாதிக், கிடைக்கும் பணத்தில் தன் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் எனவும், கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.