‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 08, 2019 01:50 PM
கேரளாவில் பெண் ஒருவருக்கு குலுக்கலுக்கு 2 நிமிடங்கள் முன்பாக வாங்கிய லாட்டரிச்சீட்டில் 60 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆரியநாடு பகுதியைச் சேர்ந்த தம்பதி லேகா - பிரகாஷ். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் தற்போது வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதைத்தொடர்ந்து முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே லாட்டரிச்சீட்டுகளை விற்பனை செய்துவந்த லேகா லாட்டரி விற்பதை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2.58 மணிக்கு லேகா 12 கேரள அரசு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். பின்னர் மதியம் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பரிசான 60 லட்சம் ரூபாய் குலுக்கலுக்கு 2 நிமிடங்களுக்கு முன் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள லேகா, “என் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் லாட்டரி விற்பனையில் ஈடுபட முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்” எனக் கூறியுள்ளார்.
