கொரோனாவால் 'எல்லாம் முடிஞ்சுது' என நினைத்த கூலி தொழிலாளி!... சொந்த ஊருக்கு திரும்பிய போது... காத்திருந்த அதிர்ச்சி!... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 22, 2020 04:45 PM

கொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

carpenter who fled kerala becomes millionaire by winning lottery

இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி கூலித்தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் முதலிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தச்சர் லெஜருள், கேரளாவில் தச்சராக வேலை செய்து வந்தார். கேரளாவில் கொரோனா அச்சம் அதிகமாக இருப்பதால், அவரது வேலை முடங்கியது. இதனால், சொந்த ஊருக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று எண்ணி, ரயில் ஏறி மேற்கு வங்கம் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கேரளாவில் இருந்த சமயத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்ததால், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் பரிசுத் தொகையை தட்டிச் சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், இருக்கின்ற வாழ்வாதாரத்தைத் தொலைத்து, வாழ்க்கையின் திசை அறியாது, சொந்த ஊருக்கே வெறும் மனதுடன் சென்ற லெஜருள், இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் அவர் சுற்றத்தார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த பேசிய லெஜருள், "இந்த தொகையை நான் எனது பிள்ளைகளின் மேற்படிப்புக்கு செலவு செய்ய உள்ளேன்" என்று தெரிவித்தார். மேலும், "என்னைப் போல எனது மகனும் தச்சராக மாட்டான். ஏனென்றால், அவன் இப்பொழுது கோடீஸ்வரன்" என்று அவர் கூறுகையில் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியில் உறைந்தனர்.

 

Tags : #KERALA #CARPENTER #LOTTERY #CORONAVIRUS