மனைவி காட்டிய ‘இரக்கத்தால்’... கணவருக்கு அடித்த ‘அதிர்ஷ்டம்’... ஒரே நாளில் மாறிய ‘வாழ்க்கை’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 19, 2019 11:09 AM

கேரளாவில் தொழிலாளி ஒருவர் மனைவியின் விருப்பத்திற்காக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது.

Kerala Man Buys Lottery Ticket On Wifes Prodding Hits Jackpot

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரையைச் சேர்ந்தவர் சிவன். கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி ஓமணா. சமீபத்தில் இந்த தம்பதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது அருகில் ஒருவர் லாட்டரிச் சீட்டு விற்றுக்கொண்டிருந்துள்ளார். அவர், தான் ஒரு இதய நோயாளி எனவும், லாட்டரிச் சீட்டை வாங்கிக் கொண்டால் அது தன்னுடைய ஆபரேஷன் செலவுக்கு உதவியாக இருக்கும் எனவும் கேட்டுள்ளார். ஆனாலும் லாட்டரிச் சீட்டு வாங்க விருப்பமில்லாத சிவன் அவரைக் கடந்து சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி ஓமணாவிற்கு லாட்டரி விற்பவர்மீது இரக்கம் ஏற்பட்டு கணவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து மனைவியின் விருப்பத்திற்காக சிவனும் அவரிடம் இருந்து லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். அதன் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சிவன் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு ரூ 70 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள சிவன், “நான் ஏழை கட்டிட தொழிலாளி. சமீபத்தில் என்னுடைய மனைவி விரும்பியதால் வாங்கிய லாட்டரிச் சீட்டில் ரூ 70 லட்சம் பரிசு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பணத்தை வீணாக செலவு செய்வதில் விருப்பம் இல்லை. லாட்டரி மூலம் கிடைத்த பணத்தை வைத்து இப்போது குடியிருக்கும் வீட்டை பெரிதாக மாற்றிவிட்டு, கடன்களை அடைக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Tags : #KERALA #MONEY #HUSBAND #WIFE #LOTTERY