‘மனுஷனை கொல்றதுக்கு சமம்’!.. அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து ‘கர்ப்பிணி’ யானையை கொன்ற கொடூரம்.. கொதித்த ‘ரத்தன் டாடா’..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவத்துக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, உணவு தேடி கிராமப் பகுதிக்கு வந்துள்ளது. இதைப் பார்த்த மர்ம நபர்கள் சிலர் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானைக்கு உணவாக கொடுத்துள்ளனர். அந்த மனிதர்கள் வழங்கிய உணவை நம்பி சாப்பிட்ட யானையின் வாய்க்குள் வெடி வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் தண்ணீருக்குள் வாயை நனைத்தப்படியே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த கர்ப்பிணி யானை உணவு தேடியே கிராமப்பகுதிக்கு வந்ததாகவும், மக்களுக்கு எந்த வித துன்புறுத்தலும் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு தேடி வந்த யானையை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினர் என பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த தொழிலதிபர் ரத்தன் டாடா, ‘கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது துக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி விலங்குகளிடம் இதுபோன்று நடந்துகொள்வது மனிதர்களை கொல்வதற்கு சமம். நீதி மேலோங்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் யானையை வெடிவைத்து கொன்றது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
— Ratan N. Tata (@RNTata2000) June 3, 2020

மற்ற செய்திகள்
