'எல்லாரும் மன்னிச்சிடுங்க'... 'ஜூம் வீடியோ காலில் மீட்டிங்'... 'கேமரா ஆன் ஆனது தெரியாமல் நடந்த பகீர் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 04, 2020 10:40 AM

ஜூம் வீடியோ காலில் கேமரா ஆன் ஆனது தெரியாமல் பெண் செனட்டர் ஒருவர் அரை நிர்வாணமாகத் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Corona : Mexican senator goes Topless during government Zoom meeting

உலகம் முழுவதும் கொரோனா என்ற ஒரே ஒரு வைரஸ் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக அரசு சந்திப்புகள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஊழியர்களோடு ஆலோசனை என அனைத்தையும் ஜூம் வீடியோ கால் மூலமாகவே நடத்துகிறது. அந்த வகையில் மெக்சிகோவில் பெண் செனட்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத் தயாரானார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரின் அரை நிர்வாண படம் வெளியானது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள் உடனடியாக அவரிடம் தெரிவிக்க, அந்த செனட்டர் உடனே சரி செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் செனட்டர் மர்தா லூசியா மிச்செர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன், விளக்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ''பொருளாதார சூழ்நிலை குறித்து நடைபெற்ற முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, கம்ப்யூட்டரின் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்காமல் நான் எனது உடையை மாற்றிக் கொண்டேன். அப்போது இந்த தவற்றைக் கவனித்த சக செனட்டர்கள் அலேஜான்ட்ரோ அர்மென்ட்ரா மியர் மற்றும் ஓவிடியோ பெரால்டா சுவாரஸ், ஆகியோர் என்னை அலெர்ட் செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தைச் சிலர் கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்கள். அதற்கு மர்தா லூசியா மிச்செர் பதிலளிக்கையில், ''தற்செயலாக என்னுடைய நடந்த இந்த சம்பவத்தில் என்னுடைய உடல் தெரிந்து விட்டது. இதற்காக நான் அவமானப்படப் போவதில்லை. ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு போன்றதுதான். எனவே தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை வைத்துக் கிண்டல் செய்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை'' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Corona : Mexican senator goes Topless during government Zoom meeting | World News.