'அமெரிக்காவின் வித்தியாசமான போர் ஆயுதம்...' '60 ஆண்டு முயற்சிக்கு' கிடைத்த 'வெற்றி...' 'ஹாலிவுட்' படங்களில் மட்டுமே 'பார்த்திருப்போம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்நடுவானில் விமானங்களை வீழ்த்தும் சக்தி மிக்க லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலில் சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதன் மூலம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை வீழ்த்தி அழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு கடற்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆளில்லாத விமானம் அல்லது ஆயுதம் ஏந்திய சிறிய படகுகளை அழிக்க இந்த லேசர் ஆயுதம் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தசோதனை குறித்த புகைப்படங்களை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது. அதில் போர்க்கப்பலிலிருந்து சக்திமிக்க லேசர் கதிர் பாயும் காட்சியை காண முடிகிறது.
கடந்த மே 16ஆம் தேதியே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. DEW (Directed Energy Weapon) என அழைக்கப்படும் இந்த ஆயுதத்தை உருவாக்க கடந்த 60 ஆண்டுகளாக அதாவது 1960களிலிருந்து அமெரிக்கா முயற்சி செய்துவந்துள்ளது.

மற்ற செய்திகள்
