"ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்திருக்கும்!" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 17, 2020 08:23 AM

ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டிவிடும் என்று அந்நாட்டில் தேசிய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.  என்னதால் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரேசிலாகத்தான் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு இந்தியா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

within June1st americas death toll will get rises, Reports

உலக அளவில் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 3ல் ஒரு பங்கு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமரிக்காவில் உயிரிழப்பு மட்டும் 86 ஆயிரத்தைத் தாண்டியது. அங்கு மட்டும் 14 லட்சம் பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உட்பட பல நாடுகளும் கொரோனாவுக்கு  எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கா மட்டும் அலட்சியமாக இருந்ததே அந்நாட்டின் இந்த படுகோர நிலைக்குக் காரணம் என்று கூறப்படும் சூழலில், அந்நாட்டில் தற்போது நோய்த்தாக்கம் குறைந்த பாடில்லை எனும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் ஜுன் மாதம் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சமாக உயரும் என்று அந்நாட்டில் தேசிய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கொரோனாவுக்கான பரிசோதனைகளை அமெரிக்கா  400 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துமுள்ளனர்.