ரோட்ல கெடந்த பைக்குள்ள '7 கோடி' ரூபா... எடுத்துக்கிட்டு நேரா 'எங்க' போய் இருக்காங்கன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்திலுள்ள கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட் - எமிலி சாண்டஸ். இவர்கள் இருவரும் தங்களது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு காரில் சில தூரம் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் சென்ற வழியில் சாலையின் நடுவே இரண்டு பைகள் கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்த டேவிட் மற்றும் எமிலி ஆகியோர் யாரோ குப்பைகளை மூட்டைக்கட்டி சாலையில் வீசி சென்றிருக்கிறார்கள் என நினைத்து குப்பையை அப்புறப்படுத்தும் நோக்கில் சாலை நடுவில் கிடந்த அந்த இரண்டு பைகளையும் காரில் எடுத்து போட்டுக் கொண்டு புறப்பட்டனர்.
அந்த பைகளை அப்புறப்படுத்த வேண்டி அதனை காரில் இருந்து எடுத்து அதனை பிரித்து பார்த்த தம்பதிக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த 2 பைகளில் கட்டுக்கட்டாக மொத்தம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடியே 56 லட்சம் ரூபாய்) இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்த தம்பதியினர் உடனடியாக இதுகுறித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த பணம் யாருக்கு உரியது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாலையில் கிடந்த சுமார் 7 கோடி மதிப்பிலான பணத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் போலீசிடம் கொண்டு சேர்த்த டேவிட் - எமிலி தம்பதியருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.