"இடைவெளி விட்டு உக்கார சொன்னா எங்க சார் கேக்குறாங்க..." "அதான் இப்படி ஒரு ஏற்பாடு..." 'உணவகத்தின் அழகிய யோசனை...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க உணவகம் ஒன்றில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க உணவகம் ஒன்று வித்தியாசமான யோசனையை கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமனித இடைவெளியை அரசு வலியுறுத்தி வருகிறது. நிறுவனங்கள், உணவகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளிவிட்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, பெரும்பாலான நாற்காலிகளில் இடைவெளிவிட்டு பொம்மைகளை வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போலவே தோற்றம் கொண்ட இந்த பொம்மைகள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உணவகத்திற்கு வரும் வாடிகையாளர்களுக்கு இடையே தனிமனித இடைவெளியை உறுதி செய்ய முடியும் என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.