அறந்தாங்கியில் ஒரு காசி... ரெண்டு 'மடங்கா' தாரேன்... கணவருக்கு 'ஆடியோ' அனுப்பி... குடும்பத்தை 'கூறுபோட்ட' வாலிபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் காசியை போல அறந்தாங்கியில் ஒரு வாலிபர் பெண்களை வலையில் வீழ்த்திய விவரம் வெளியாகி அதிர வைத்துள்ளது.

சமீபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த முகமது அப்சல் (23) என்னும் இளைஞரும் பேஸ்புக் மூலம் பெண்களிடம் நெருங்கிப்பழகி அவர்களிடம் பணம், நகை பறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. கேட்டரிங் முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்த அப்சல் பேஸ்புக் வழியாக தனியாக இருக்கும் பெண்களிடம் நெருங்கிப்பழகி இருக்கிறார்.
அவ்வாறு பேசுகையில் தன்னுடைய வலையில் வீழ்ந்த பெண்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பணம், நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதுபோல அறந்தாங்கி பகுதியில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவருடன் அப்சலுக்கு சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 குழந்தைகளுடன் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அப்சல், இரட்டிப்பாக்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து பணம், நகைகளை வாங்கி இருக்கிறார்.
இதற்கிடையில் அந்த பெண்ணின் கணவர் பணம், நகை குறித்து கேட்டு நெருக்கடி அளிக்கவே அப்சலிடம் நகை, பணத்தை அவர் திருப்பி கேட்டு இருக்கிறார். ஆனால் அப்சல் திருப்பிக்கொடுக்க முடியாது என தெரிவித்து விட்டார். மேலும் அந்தப் பெண்ணின் கணவருக்கு இருவரும் பேசிய ஆடியோ பதிவை அனுப்பி வைக்க, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குள் சண்டை வெடித்தது. இதையடுத்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்ற அந்த பெண் அப்சல் மீது புகாரளிக்க, இதுகுறித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அப்சல் இதேபோல ஏராளமான பெண்களிடம் நெருங்கிப்பழகி அவர்களிடம் பணம், நகை பறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. சென்னை, காரைக்குடி, மதுரை, அறந்தாங்கி என இதுவரை 5-க்கும் மேற்பட்ட பெண்களை அப்சல் ஏமாற்றி இருக்கிறார். இதையடுத்து அப்சலை கைது செய்த காவல்துறையினர் அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அப்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து ரகசியமாக புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
