'கொரோனா' தடுப்பு மருந்துக்கு சீனா வைத்த பெயர் 'AD5-NCOV ' 'சார்ஸ்க்கும் இதுதான் மருந்து...' 108 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா மற்றும் சார்ஸ் வைரசைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை 108 மனிதர்களிடம் பரிசோதித்ததில் வெற்றியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது புதிய நம்பிக்கையை ஏற்படத்தியுள்ளதாக பிரிட்டனின் லான்சட் மருத்துவ இதழ் உறுதி செய்துள்ளது.
![covid-19 vaccine developed in china shows promising results covid-19 vaccine developed in china shows promising results](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/covid-19-vaccine-developed-in-china-shows-promising-results.jpg)
இந்த ஆய்வின் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் இதனை பரிசோதித்து அறியலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த மருத்துவ இதழான The Lancet, சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிப்பதாகவும் உறுதி செய்துள்ளது.
முதல்கட்டமாக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு மாறுபட்ட அளவுகளில் மருந்து செலுத்தியது. Ad5-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், இந்த மருந்தை மனிதர்களின் உடல் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் போரிடக் கூடியது என்றும் The Lancet இதழ் கூறியுள்ளது. இதையடுத்து 2வது கட்டமாக 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)