கர்ப்பமான காதலி!.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!.. பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை மணந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வாட்டாத்தி கோட்டை கொள்ளுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் இவரது மகன் லெனின் (வயது 29). இவர் அதே பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் இடையாத்தி கிராமம் வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் மகள் சண்முகப்பிரியாவுக்கும் 2 ஆண்டு காலமாக காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால், சண்முகப்பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை லெனினிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் சண்முகப்பிரியா கர்ப்பமானார். இதையடுத்து கர்ப்பத்தை கலைக்க லெனின் பலமுறை சண்முக பிரியாவை வற்புறுத்தி உள்ளார். இதற்கு சண்முகபிரியா மறுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சண்முகப்பிரியா தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு புதுக்கோட்டைக்கு சென்றிருந்த நேரத்தில், பட்டுக்கோட்டை லட்ச தோப்பு பகுதியை சேர்ந்த வைரக்கண்ணு என்பவரது மகள் ஐஸ்வர்யா என்ற முதுநிலை பட்டதாரி பெண்ணை லெனின் திருமணம் செய்து கொண்டாராம்.
இதையறிந்த சண்முகப்பிரியா, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் சண்முகப்பிரியா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்ததை அறிந்த லெனின் விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய நிலையில் லெனின் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கர்ப்பிணியான சண்முகப்பிரியாவுக்கு நேற்று பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் லெனின் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். சண்முகப்பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்ததை அறியாமலேயே லெனின் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
