தமிழகத்தில் இந்த '4 மருத்துவமனைகளில்' 'பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி...' 'தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 4 மருத்துவமனைகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனைகள் நடத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கும், வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து திரும்பிய எட்டு பேர் பிளாஸ்மா தானம் அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா, சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா தானம் அளிக்கும் நபர் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருக்க வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருமுறை நெகடிவ் வந்திருந்தால் குணமடைந்து 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
மேலும், குழந்தை பெற்றிருக்காத பெண்கள் மட்டுமே தானம் அளிக்க முடியும். எச்.ஐ.வி, மலேரியா உள்ளிட்ட நோய்த் தொற்று பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படும். இந்த பிளாஸ்மா 18 வயதுக்கு மேலான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும். கர்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட மாட்டாது.