அத மட்டும் 'நீங்க' செஞ்சா... எங்க பதிலடி 'வெறித்தனமா' இருக்கும்... மொதல்ல ஒங்க 'மக்களை' காப்பாத்துங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரவி கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்கா கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து சீனா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது. கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனாவின் மீது முன் வைத்தது. இதனால் சீனாவில் இருந்து இழப்பீடு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி பத்திரிக்கையாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், 'அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இதன் காரணமாக எங்கள் மீது அமெரிக்கா சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதையும் ஏற்க மாட்டோம். இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச திட்டங்களை மீறி நடப்பதாகும்.
அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தாலோ, அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதிர்ப்போம். அதே நேரத்தில் சீனா அதற்கான தக்க பதிலடி கொடுக்கும். மற்ற நாடுகளை குறை கூறுவதை நிறுத்தி விட்டு அமெரிக்கா தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல' என்றார்.
மேலும், சீனா கொரோனாவிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், 'கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சீன அரசு திறம்பட நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏராளமான தியாகங்களை செய்து கொரோனா என்னும் கொடிய வைரசை வென்றோம். சீனாவில் கரோனா தொற்று ஏற்ப்பட்டதிலிருந்து, உலக சுகாதார அமைப்புக்கு அனைத்து தகவல்களையும் கூறினோம்,உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்' என தெரிவித்தார்.