கொரோனா 'விவகாரம்'... "என்னால இப்போ பேச முடியாதுப்பா"... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 17, 2020 06:54 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச விருப்பமில்லை என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump refuse to speak with Xi Jinping about Corona issue

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக தாக்கி வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் 14 லட்சம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் 88 ஆயிரம் பேர் வரை உயிர் பலியும் வாங்கியுள்ளது. சீனா தொடக்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்காத காரணத்தால் தான் இந்த அளவுக்கு உலகம் முழுவதும் வைரஸ் பேராபத்தை உருவாகியுள்ளது என அமெரிக்கா தொடக்கத்தில் குற்றஞ்சாட்டியது.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் மீது தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் மோதல் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங்குடன் இப்போது பேச விரும்பவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் மூலம் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடாது. வேறு நாடுகளுக்கு பரவ ஆரம்பிப்பதற்கு முன்னரே சீனா வைரசை கட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது' என தெரிவித்தார்.