'சீனாவுக்கு' எப்படி 'அமெரிக்கா' பதிலடி 'கொடுக்கும்...' 'கேள்விக்கு' அதிரடி பதிலளித்த 'ட்ரம்ப்...' 'சீன நிறுவனங்களுக்கு விரைவில் செக்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 15, 2020 05:28 PM

சீனா உடனான ஒட்டு மோத்த உறவையும் தங்களால் துண்டிக்க முடியும் என அமெரிகக் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US can sever its entire relationship with China -Trump

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா வைரசை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க அமெரிக்காவால் முடியும் என்றும் தெரிவித்தார்.

சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச விரும்பவில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், சீனா மீது தான் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்தார்.

சீனாவுக்கு எப்படி அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், சீனாவுக்கு பதிலடியாக எங்களால் பல விஷயங்கள் செய்ய முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும் எனக் கூறினார்.

மேலும் சீனாவில் முதலீடு செய்துள்ள பல நூறு கோடி டாலர்களை திரும்பப் பெறப் போவதாகவும், நியூயார்க் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பின்றபற்ற வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.