'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. அங்கு 85 ஆயிரத்துக்கம் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். நோயைக் கட்டப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர். கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.
இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.
கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம்" என பதிவிட்டுள்ளார்.