கழுத்தளவு மண்ணுல 'பொதச்சு'... சுத்தியும் 'நெருப்பை' வளத்து... 'உயிருடன்' விளையாடிய சாமியார்... அதுக்காகவா 'இப்படி' பண்ணாரு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை உலகத்தை விட்டு விரட்ட வேண்டி சாமியார் ஒருவர் தன்னை மண்ணிற்குள் புதைத்துக் கொண்டு சுற்றி தீயை வைத்து பூஜை ஒன்றை செய்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணியில் உலகிலுள்ள விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஸ்ரீனிவாசன் என்பவர், கொரோனா வைரசை உலகில் இருந்து விரட்ட வினோத பூஜை ஒன்றை மேற்கொண்டுள்ளார். கோவிலில் குழி தோண்டி அதில் இறங்கிய ஸ்ரீனிவாசன், தலை தவிர தனது உடல் முழுவதையும் மண்ணிற்குள் புதைத்துக் கொண்டார். பின் தன்னை சுற்றி நெருப்பு வைத்துக் கொண்டு மந்திரங்களை உச்சரித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஊரில் மழை பெய்ய வேண்டி 100 கிலோ மிளகாய் வத்தலை தீயிலிட்டு எரித்து பூஜை ஒன்றை செய்துள்ளார். அதே போல கிலோ கணக்கில் பாகற்காயை வெட்டி அதில் குங்குமம் தடவி தீயிலிட்டு யாகம் ஒன்றையும் செய்துள்ளார்.
கொரோனா வைரசை ஒழிக்க மருந்தினை கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இது போன்ற பல வினோதமான செயல்களை மேற்கொண்டு கொரோனாவை ஒழிக்க நடக்கும் முயற்சிகள் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
