'சீனாவை' எளிதில் 'விட்டு விட' மாட்டோம்... 'அடுத்தடுத்து' தொடர்ந்து 'பதிலடி' இருக்கும்... 'டிரம்ப் பாய்ச்சல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம், என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவியதற்கு சீனா தான் காரணம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். சீனா வைரஸ் குறித்த தகவல்களை மறைத்து விட்டது என்றும் குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம். இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிரான எங்களது சட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடரும் என " என கூறினார்.
மேலும், "அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைந்திருக்கலாம் என சிலர் கூறியுள்ளனர். இவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்
