"மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா?".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள?'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க பாடகர் ஜேசன் டெரூலோ, டிக்டாக் சேலஞ்ஜ் ஒன்றை முயற்சி செய்யும் போது தனது பற்களை இழந்துள்ளார்.
ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு சுவாரஸ்யமான, அதேசமயம் ஆபத்தான வீடியோக்களை எடுத்து அவ்வப்போது டிக்டாக்கில் பதிவேற்றி வந்தார் ஜேசன் டெரூலோ. இந்த நிலையில் ஒரு சவாலில் தோற்றுப் போனதால் தனது ஒரு பக்க புருவத்தை எடுப்பது, இன்னொரு சவாலில் தனது பல் வரிசையில் முன்னால் ஒரு பல் மட்டும் இல்லை என காட்டுவது என தொடர்ந்து பல வீடியோக்களை அவர்கள் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் மின்சார ட்ரில் ஒன்றில் சோளக் கதிரை செருகி வைத்து, அந்த ட்ரில் வேகமாக சுற்றும்போது சோளத்தை சாப்பிடும் சவாலை டிக்டாக்கில் ஜேசன் டெரூலோ மேற்கொள்ளும்போது அவருக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “மக்களே இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்றதொரு முயற்சியை செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கு எப்போதுமே ஆசையாக இருக்கும்!” என்று சொல்லி வீடியோவை தொடங்கும் ஜேசன், மின்சார ட்ரில் இயங்கும்போது அதில் சோளம் வேகமாகச் சுற்ற அதை சாப்பிட வாயை வைக்கிறார்.
ஆனால் சட்டென்று வலியில் துடித்து சோளக்கதிரில் இருந்து வாயை எடுத்துக்கொள்கிறார். ஆனால் அவரது முன் பற்கள் உடைந்திருக்கின்றன. சோளத்திலும் லேசாக இரத்த தட்டுகள் இருக்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.