2,3 மாசமா இதே 'வேலையா' இருக்காரு... சென்னையில் இருந்து 'பறந்த' தகவல்... திருப்பூரில் 'சிக்கிய' பனியன் தொழிலாளி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 04, 2020 11:50 AM

சமூக வலைத்தளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Worker Arrested under Pocso Act, Near Tirupur District

உலகிலேயே சிறுவர்களின் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து இதுதொடர்பான பட்டியலை போலீசார் தயார் செய்தனர். மேலும் சிறுவர்களின் ஆபாச படங்களை பிறருக்கு பகிர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சிறுவர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதுவரை சுமார் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் 600 பேர் கொண்ட பட்டியலையும் போலீசார் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமிகள் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திருப்பூர் பனியன் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர குமார்(28) என்னும் வாலிபர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவு செய்து வந்துள்ளார்.  இதனை சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினர். அதன் அடிப்படையில் திருப்பூர் போலீசார் ஜிதேந்திர குமாரை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #POLICE