VIDEO: ‘கத்தியை காட்டி ரகளை செய்த வாலிபர்’.. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வருபவர் கேசவன். கடந்த ஞாயிற்றுக்கிழமை கேசவன் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அருகில் உள்ள மற்றொரு கடையில் பணியாற்றும் ஆண்டனி, நடராஜன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கேசவனை இருவரும் தாக்கியுள்ளனர்.
அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் சண்டையை தடுக்க முயன்றுள்ளனர். உடனே இருவரும் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீசார் ஆண்டனி மற்றும் நடராஜன் இருவரையும் கைது செய்தனர்.
News Credits: Polimer News
