சிறுமிகள் ஆபாச படத்தை 'பரப்பிய' ஈரோடு வாலிபர்... தட்டித்தூக்கி கம்பி 'எண்ண' வைத்த போலீஸ்... சிக்கியது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுமிகள் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பரப்பிய ஈரோடு வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பாப்பாத்திக்காடு என்னும் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ்வரன்(35). இன்னும் திருமணமாகாத இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யோகேஷ்வரன் பரப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புகாரின் அடிப்படையில் போலீசார் அவரது பேஸ்புக்கை ஆராய்ந்த போது சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அவர் பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக திருச்சி, மதுரையில் சிறுமிகளின் ஆபாச படங்களை பரப்பிய இருவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
