பாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து.. ‘போலீஸ் ஸ்டேஷனில்’ இருந்து தப்பிய ‘கைதி’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 03, 2020 07:33 AM

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theft suspect flees police station from toilet window in Mumbai

மும்பை சிவாஜி நகர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக முகமது சபியுல்லாகான் (24) என்ற இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிய அந்த இளைஞர், கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த போலீசார், முகமது சபியுல்லாகானுக்கு எதிராக 2 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #MUMBAI #TOILET