‘ஆதார்ல இப்படியா முகம் இருக்கும்?’.. ‘சந்தேகமா இருக்கே?’.. உயர் ரக ஹோட்டலில் தங்கியிருந்த பெண் செய்த அதிரவைத்த காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 02, 2020 06:08 PM

மதுரையில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்துவிட்டு தனியார் விடுதியில் தங்கிவந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

uzbekistan woman arrested for staying in indian hotels using fake aadh

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீட்டில் உள்ள தனியார் உயர் ரக தங்கும் விடுதியில் போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது ரூபியா நிஷன் என்கிற பெயரில் பெண் ஒருவர் அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது.

அப்பெண் டெல்லியைச் சேர்ந்தவர் என்று பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சந்தேகித்த போலீஸார் அவர் சமர்ப்பித்த ஆதார் அடையாள அட்டையை பரிசோதித்தனர். அவர் முகம் வெளிநாட்டு பெண்ணின் முகம் போல அதில் இருக்கவே, அவரை பிடித்து விசாரித்த போலீஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதன்படி அப்பெண் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயதான நைமோவா ஜெரினா என்பதையும், கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த அப்பெண், கடந்த மார்ச் மாதம் விசா காலம் முடிந்த பின்னும் போலி ஆதார் அட்டையை வைத்து இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றியதும், பல உயர் ரக விடுதிகளில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதனால் அவரை கைது செய்த போலீஸார், அவருடன் சுற்றிய சில இந்தியர்களை பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

Tags : #AADHAAR #VISA #WOMAN #MADURAI #POLICE