'கொஞ்ச நேரம் நின்னுட்டு போலாம் மச்சான்'... பைக்கை விட்டு இறங்கிய 'நண்பர்கள்'... கட்டுப்பாட்டை இழந்த லாரிக்கடியில் 'சிக்கி'... சம்பவ இடத்திலேயே '5 பேர்' பலி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகட்டுப்பாட்டை இழந்த லாரிக்கடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
![Five Bikers Killed in Mumbai-Pune Highway, Police Investigate Five Bikers Killed in Mumbai-Pune Highway, Police Investigate](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/five-bikers-killed-in-mumbai-pune-highway-police-investigate.jpg)
புனே மாவட்டம் தாலேகாவ் என்னும் பகுதியை சேர்ந்த 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்னும் பகுதிக்கு சென்றிருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் அங்கிருந்து மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் புனே நோக்கி வந்து கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் மும்பை-புனே விரைவுச்சாலையில் உள்ள 'அண்டா பாயிண்ட்; என்ற வளைவில் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் இயற்கை உபாதைக்காக சற்று கீழிறங்கி சென்றுள்ளார். இந்த நேரத்தில் மாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று இவர்கள் நின்று கொண்டிருந்த வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த 5 பேரும் லாரிக்கடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இயற்கை உபாதைக்காக கீழே சென்றவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டார்.
விபத்துக்குள்ளான லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரிக்கடியில் சிக்கிய ஐவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)