'சென்னையில் பரிதாபம்'...'பார்லர்ல இருந்து வீட்டிற்கு வந்த பெண்'... தூங்கி எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 04, 2020 09:43 AM

அழகு நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பெண், காலையில் தூங்கி எழுந்ததும் மரமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Police investigate Mysterious Death of Beauty Parlour worker

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் சுங் சூன் மொய். இவர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் செட்டிபேடு பகுதியில் தங்கி, தண்டம் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் அழகு நிலையத்தில், இவருடன் 10 வடமாநில பெண்களும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அறை எடுத்துத் தங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற  சுங் சூன் மொய், தனக்கு அசதியாக இருப்பதாகக் கூறிவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்குச் செல்ல மற்ற பெண்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது  சுங் சூன் மொய் மட்டும் எழும்பாமல் படுக்கையில் இருந்துள்ளார். இதையடுத்து வேலைக்கு நேரம் ஆகிவிட்டது, சீக்கிரம் கிளம்பு என சுங் சூன் மொய்யை அவரது நண்பர்கள் எழுப்பியுள்ளார்கள்.

ஆனால் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது தான் சுங் சூன் மொய் மர்மமான முறையில் இறந்ததை அறிந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனைத்தொடர்ந்து சுங் சூன் மொய் எப்படி இறந்தார் என்பது குறித்து, முதற்கட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள்.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #CHENNAI #MYSTERIOUS DEATH #BEAUTY PARLOUR