‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நீலாங்கரையில் அமெரிக்க பெண் ஒருவரின் சம்யோஜிதத்தால் தொடர் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.

வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குநராக பணி புரிந்து வருபவர் பாரதி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலக குடியிருப்பில் வசித்து வரும் இவரது பெற்றோர்கள் மட்டும் பெசண்ட் நகரில் உள்ள இவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த 14-ஆம் தேதி திருச்சிக்கு சென்ற நேரமாக பார்த்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர தோடு உட்பட 40 சவரன் நகை, ரொக்க பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
அதன் பின் இதே கொள்ளையர்கள் நீலாங்கரையில் உள்ள அமெரிக்க தம்பதியரின் வீட்டில் புகுந்து அவர்களைத் தாக்கிவிட்டு கொள்ளைச் சம்பவம் செய்ய முயன்றனர். ஆனால் வீட்டின் முதல் தளத்தில் இருந்த டயானா என்கிற பெண்மணி, கொள்ளையர்கள் வருவதைப் பார்த்ததும் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதோடு 100க்கு போன் செய்து கூற, போலீஸாரின் சைரன் சத்தத்தைக் கேட்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
ஆனால் பதற்றத்தில் திருடர்கள் விட்டுச் சென்ற பைக்குகளின் எண்களை வைத்து, பாரதியின் பெசண்ட் நகர் வீட்டுக் கொள்ளை பற்றியும் போலீஸார் அறிந்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த வன்னி கருப்பு மற்றும் மதுரையைச் சேர்ந்த சுரேந்தரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும், தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரைத் தேடி வரும் போலீஸார், அந்த அமெரிக்க பெண்ணின் சாதூரியமும் சமயோஜிதமும்தான் கொள்ளையர்களை பிடிக்க பேருதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
