'ரகசிய' தொடர்பை துண்டித்ததால்... 'அண்ணியின்' முதுகில் கல்லைக்கட்டி... இளைஞர் செய்த 'கொடூர' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 02, 2020 06:56 PM

திருவண்ணாமலை அருகே ரகசிய தொடர்பை துண்டித்ததால், அண்ணியின் முதுகில் கல்லைக்கட்டி இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Youth Killed Sister- in-Law near Tiruvannamalai, Details

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(45) இவரது மனைவி மின்னல்கொடி(40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை  சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். குழந்தைகள் இருவரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் வீட்டில் மின்னல்கொடி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி மின்னல்கொடி அங்குள்ள கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை  தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அண்ணாமலையின் சகோதரர் சவுந்தரராஜன்(30) என்பவருக்கும், மின்னல் கொடிக்கும் இடையே ரகசிய உறவு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த உறவால் சவுந்தரராஜன் மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சவுந்தரராஜன் மனைவி மின்னல் கொடியை சந்தித்து ரகசிய உறவை விடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த மின்னல்கொடி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சவுந்தரராஜனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன், மின்னல் கொடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு  அதற்காக தன்னுடைய உறவினர் ஒருவரையும் துணைக்கு சேர்த்து கொண்டுள்ளார். சம்பவ தினமான கடந்த 25-ம் தேதி மின்னல் கொடி நடந்து வந்து கொண்டிருந்த போது சவுந்தரராஜன் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தி இருக்கிறார்.

பதிலுக்கு மின்னல் கொடி மறுப்பு தெரிவிக்க ஆத்திரம் அடைந்த சவுந்தரராஜன் அவரின் முதுகில் கல்லைக்கட்டி கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். தற்போது போலீசார் சவுந்தரராஜனை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.