‘மூக்கனூர் எப்டி போகணும்?’.. வழி கேட்ட மர்மநபர்கள்.. ‘ஸ்கூட்டி’ ஓட்டி பழகிய பெண்ணுக்கு நடந்த கொடுமை..! சேலம் அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓமலூர் அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ஜமுனா. இவர் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பூசாரிப்பட்டி சர்வீஸ் சாலையில் பைக் ஓட்டி பழகியுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பைக்கில் வந்த இருவர் மூக்கனூருக்கு எப்படி செல்ல வேண்டும் என ஜமுனாவிடம் வழி கேட்டுள்ளனர்.
ஜமுனா வழி சொல்லிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜமுனா கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். வழி கேட்பதுபோல் நடித்து பெண்ணின் தாலிச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
