திருப்பூரில் பயங்கரம்! நடுராத்திரியில் திடீரென 'அலறித்துடித்த' பெண்கள்... 'அதிர்ந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த சைக்கோ வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(65) இவர் தன்னுடைய மகன், மருமகளுடன் அவர்களின் வீட்டில் வசித்து வந்தார். நேற்றிரவு ஜோதிலட்சுமி தன்னுடைய வீட்டிற்கு வெளியே உள்ள தள்ளுவண்டியில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர் ஹாலோபிளாக் கல் ஒன்றை எடுத்து ஜெயலட்சுமியின் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி துடிதுடித்து இறந்தார்.
தொடர்ந்து வீட்டிற்குள் படுத்திருந்த மருமகள் கலைவாணி(30) பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயலட்சுமி (30) ஆகியோரின் மீதும் கல்லை தூக்கிப்போட்டார். இதில் அவர்கள் இருவரும் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு ஜெயலட்சுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலைவாணி, ஜெயலட்சுமி இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சைக்கோ வாலிபர் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
