‘பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல’.. 4 பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 03, 2020 12:30 PM

பெற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode four govt school student missing police investigate

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மவுலி, தருண்ஸ்ரீ, மிதுன் ரித்தீஷ், விஜய் ஆகிய நான்கு மாணவர்கள் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் உள்ள சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது படிப்பு செலவு அதிகமாக இருப்பதால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என காணாமல்போன மாணவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #POLICE #ERODE #MISSING