VIDEO: 'குளிச்சு முடிச்சாச்சு' ஒரேயொரு தடவ... நண்பர்களின் 'கண்முன்னே'... இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்... 'வைரலாகும்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக் டாக் ஆசையால் 18 வயது இளைஞர் நீரில் குதித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா(18) இவருக்கு டிக் டாக்கில் விதவிதமாக வீடியோக்கள் போடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றார். குளித்து முடித்தபின் அவருக்கு அங்கு ஒரு டிக் டாக் வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.
मुजफ्फरनगर में Tik Tok वीडियो बनाते समय युवक की लाइव मौत, सोशल मीडिया पर लाइव मौत की वीडियो वायरल, 18 वर्षीय राज ने झाल के पानी में छलांग लगाई और जान ली गई। pic.twitter.com/lunBzOfTrh
— Shadab Rizvi (@ShadabNBT) March 1, 2020
இதையடுத்து நண்பர்களிடம் மொபைல் கொடுத்து வீடியோ எடுக்க சொல்லி தண்ணீருக்குள் தலைகீழாக பாய்ந்துள்ளார். அவரது போதாத நேரம் அவர் குதித்த இடத்தில் ஏராளமான பாறைகள் இருந்துள்ளன. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ராஜாவின் குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்காமல் அவரது உடலை புதைத்துள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்து இருக்கின்றனர்.
