'பயங்கரமான 'தல' ரசிகனா இருப்பாரோ'?... 'உருக வைத்த கேரள போலீஸ்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 03, 2020 04:19 PM

கண்ணான கண்ணே பாடலை வாசித்து பலரையும் உருகச் செய்துள்ளார் கேரள காவல்துறை அதிகாரி ஒருவர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kerala : Police officer from Kannur district playing Kannaana Kanney

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து, இசை அமைப்பாளர் இமான் இசையில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கண்ணான கண்ணே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து பலரையும் முணுமுணுக்கச் செய்தது. தந்தை, மகளுக்கு இடையே இருக்கும் அழகான உறவை வெளிக்காட்டும் இந்த பாடலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த வகையில் மொழியைக் கடந்தும் இந்த பாடல் பலரது இதயங்களைக் கொள்ளை அடித்தது. இந்நிலையில் கேரள காவல்துறையில் கண்ணூர் டிவிஷனை சேர்ந்த அதிகாரி ஒருவர், கண்ணான கண்ணே பாடலின் டியூனை வாசிக்க அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் கட்டி இழுக்கும் அந்த டியூனை வசித்து பலரையும் உருகச் செய்துள்ளார் அந்த அதிகாரி.

Tags : #VISWASAM #AJITHKUMAR #KERALA #POLICE #KANNAANA KANNEY