இது 'டீம்' இல்ல 'விக்ரமன்' சார் படம் ... சேப்பாக்கத்தில் கால் பதித்த 'சி.எஸ்.கே'... ஆர்ப்பரித்த 'ரசிகர்'கள் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 04, 2020 11:41 AM

ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

Chennai Super Kings started their practice session in Chepauk

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்தனர். இந்த வீடியோவை சென்னை அணி வெளியிட்டுள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. சென்னை அணி பயிற்சியில் ஈடுபடுவதை காண திரளான ரசிகர்கள் மைதானத்தில் நிறைந்திருந்தனர். குறிப்பாக தோனி பேட்டிங் செய்த போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஐ.பி.எல் போட்டிகளில் எந்த அணிக்கும் இல்லாத ரசிகர்கள் பட்டாளம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு. பயிற்சிகள்  தொடங்கும் போது மைதானத்தில் நிறையும் ரசிகர்களே அதற்கு முன்னுதாரணம். ஒரு கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் என்பதைத் தாண்டி ஒரு உணர்ச்சி நிறைந்த உறவை சி.எஸ்.கே அணியுடன் உருவாக்கி வைத்துள்ளனர். 'தல' தோனி, சின்ன 'தல' ரெய்னா ஆரம்பித்து புதிதாக அணியில் இணைந்த வீரர்கள் வரைக்கும் இந்த ரசிகர்களின் ஆதரவுண்டு.

'சென்னைல இருக்கிறவங்களுக்கு வேற வேல இல்லை, அதனால தான் ப்ராக்டிஸ் மேட்ச் எல்லாம் போயி பாக்குறாங்க' என பலர் சொல்வதுண்டு. அது அனைத்தையும் தாண்டி சிஎஸ்கே ரசிகர்கள் தனித்து நிற்கிறார்கள், ஏனெனில் 'IPL is a word, CSK is an emotion'.

 

 

Tags : #MS DHONI #CSK #IPL 2020 #SURESH RAINA