'வாட்ஸ்அப் குரூப்க்கு வந்த மெசேஜ்'... 'டேய் ஒண்ணும் பண்ணிடாத டா'...'பதறிய நண்பர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 03, 2020 12:40 PM

'என்ன மன்னிச்சுருங்க' என வாட்ஸ்அப் குரூப்க்கு காவலர் மெசேஜ் அனுப்பிய நிலையில், அந்த காவலர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Villupuram : Police constable commits suicide by hanging from tree

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் செஞ்சி காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக, கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், அதற்கான பாதுகாப்புப் பணிக்குச் சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் செஞ்சி காவலர்கள் மட்டும் இருக்கும்  வாட்ஸ்அப் குரூபில் தனது இருப்பிடத்தை ஷேர் செய்த சரவணன், ''என்னுடைய கடைசி நிமிடங்கள், என்னை மன்னிச்சிடுங்க சார்'' என குறுஞ்செய்தி ஒன்றை அந்த குரூப்பில் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த காவலர்கள், ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து,  சரவணனுக்கு உடனே செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் சரவணன் காவலர்களின் அழைப்பை எடுக்கவில்லை.

இதையடுத்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சரணவன் அனுப்பிய இடத்தை கண்டறிந்து காவல்துறையினர் அங்குச் சென்று பார்த்துள்ளார்கள். ஆனால் காவலர்கள் செல்வதற்கு முன்பே சரவணன் மரத்தில் தூக்கிட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதையடுத்து சரவணனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சரவணன் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #POLICE #POLICE CONSTABLE #HANGING #VILLUPURAM