“அம்மானா அம்மாதான்.. இவங்களுக்குதான் சல்யூட் அடிக்கணும்!”.. உருகிய நெட்டிசன்கள்.. நெகிழவைத்த காவலர்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Mar 03, 2020 11:47 AM

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தா பகுதிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 நாள் பயணமாக சென்றார். அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட காவலர்களுள் இருந்தவர்தான் கான்ஸ்டபிள் ப்ரீத்தி ராணி.

கைக்குழந்தையுடன் காவலர்UP lady Cops comes for duty with her baby

கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ப்ரீத்தி. அன்றைய தினம் ப்ரீத்தியின் கணவருக்கு தேர்வு இருந்ததால் அவரால் குழந்தையை கவனிக்க முடியாமல் போகவே, தனது ஒன்றரை வயது மகனை ப்ரீத்தி ராணி கையில் தூக்கிக்கொண்டு காலை 6 மணிக்கெல்லாம் பணிக்கு வந்துள்ளார்.

இதுபற்றி பேசிய ப்ரீத்தி, `குழந்தையைப் போலவே தனக்கு கொடுக்கப்பட்ட  பணியும் மிகவும் முக்கியம் என்றும் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பு பணியின் போது அழைத்துவர வேண்டிய சூழல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வலம் வர, அம்மா எப்பவும் அம்மாதான், சூப்பர் காப், சூப்பர் மாம் என்றெல்லாம் இணையவாசிகள் பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #POLICE #COPS #DUTY #UP