"இவருக்கு ஏங்க 'ஆஸ்கர்' விருது குடுக்கல..." போலீசுக்கே அல்வா கொடுத்த 'கேடி பில்லா'... நடிப்பு சூறாவளியான போதை ஆசாமி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களை ஆபாச வார்த்தைகளால் பேசி, கேலி கிண்டல் செய்த போதை ஆசாமி, வலிப்பு வந்தது போல நடித்து போலீசாரிடமிருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு, கேரள மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏறிய போதை ஆசாமி ஒருவர், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.
பேருந்தில் நடத்துநர் எவ்வளவோ கூறியும் அந்த நபர் கேட்பதாயில்லை. ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்தில், பேருந்தில் பயணம் செய்த பெண்களை ஆபாச வார்த்தைகளை பேசி கிண்டல் செய்யத் தொடங்கினார். இதனால் பயணிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பேருந்தை காவல்நிலையத்திற்கு விட சொன்னார் நடத்துனர்.
தக்கலை காவல்நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றதும், ஓட்டுநரும், நடத்துனரும், காவல் நிலையத்திற்குள் சென்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்தபோது, அந்த நபர் வலிப்பு வந்தது போல, கைகால்களை இழுத்துக் கொண்டு, வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளார்.
அந்த நபரிடம் விசாரணை நடத்துவதா, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என போலீசாரும், பொதுமக்களும் குழம்பிக் கொண்டிருக்க, வலிப்பு வந்ததுபோல சீட்டில் சுருண்டிருந்த அந்த நபர், திடீரென எழுந்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போதுதான், அந்த நபர், நாடகமாடியது போலீசாருக்கு புரிந்தது. இதையடுத்து தப்பிச் சென்ற போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
