‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 02, 2020 05:14 PM

ரயில் விபத்திலிருந்து மாற்றுத்திறனாளி ஒருவரைக் காப்பாற்றும்போது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Cop Dies Saving Man From Train Days After Becoming Father

மும்பை தாக்குர்லியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர் ரன்வீர் குர்ஜர் (27). இவர் சம்பவத்தன்று இரவு பாந்திரா ரயில்நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது இரவு 10.45 மணியளவில் பாந்திரா - மாகிம் இடையே தண்டவாளத்தில் ரோந்து சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் மின்சார ரயில் வருவதை கவனிக்காமல் மாற்றுத்திறனாளி ஒருவர், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அதை கவனித்த ரன்வீர் குர்ஜர் உடனடியாக ஓடிச்சென்று அவரை தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டுக் காப்பாற்றியுள்ளார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பித்த நிலையில், ரன்வீர் குர்ஜர் தண்டவாளத்தில் இருந்து விலகிச் செல்வதற்குள் மின்சார ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சோலி கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் குர்ஜனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி ஒருவரைக் காப்பாற்றும்போது ரன்வீர் குர்ஜர் உயிரிழந்துள்ள சம்பவம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI #TRAIN #ACCIDENT #POLICE #HANDICAPPED #FATHER #BABY